ரத்தக்குழாய் வெடித்ததில் பதிவறை எழுத்தர் இறப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரத்தக்குழாய் வெடித்ததில் பதிவறை எழுத்தர் இறப்பு

Added : ஜூன் 20, 2020
Share
ஆத்தூர்: பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் மாதவமுரளி, 56; ஆத்தூர் ஒன்றிய அலுவலக, பதிவறை எழுத்தர். நேற்று காலை, நடைபயிற்சியை முடித்துவிட்டு, வீட்டில் பணிக்கு செல்ல தயாரானார். திடீரென, சுயநினைவு இல்லாமல் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் வெடித்ததில் இறந்ததாக

ஆத்தூர்: பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் மாதவமுரளி, 56; ஆத்தூர் ஒன்றிய அலுவலக, பதிவறை எழுத்தர். நேற்று காலை, நடைபயிற்சியை முடித்துவிட்டு, வீட்டில் பணிக்கு செல்ல தயாரானார். திடீரென, சுயநினைவு இல்லாமல் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் வெடித்ததில் இறந்ததாக கூறினர். அ.தி.மு.க.,வின், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் லிங்கம்மாள், பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர், அருள்பாரதி உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தினர். லிங்கம்மாள், அவரது குடும்பத்தினரிடம், 25 ஆயிரம் ரூபாய் ஈமச்சடங்கு நிதி வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X