சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விலை உயர்ந்த பைக் திருடிய 2 பேருக்கு காப்பு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

சேலம்: விலை உயர்ந்த பைக்குகளை திருடி வந்த, இருவரை, போலீசார் கைது செய்து, நான்கு பைக்குகளை மீட்டனர். சேலம், வடக்கு அழகாபுரத்தைச் சேர்ந்தவர் அமன்குமார், 20. இவர், கடந்த மே, 20ல், வீடு முன், 'பல்சர்' பைக்கை நிறுத்தியிருந்த நிலையில், மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். மறுநாள், அவர் புகார்படி, அழகாபுரம் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவை பார்வையிட்டனர். அதில், அழகாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் பிரபு, 22, லோகநாதன் மகன் சுதாகர், 22, திருடியதை உறுதி செய்தனர். அவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று முன்தினம், போலீசில் சிக்கினர். விசாரணையில், பல்சர் பைக் தவிர்த்து, மூன்று ரோட்டில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள புல்லட், கோரிமேட்டில் யமஹா பைக், வின்சென்ட் அருகே டியோ மொபட் திருடியதை ஒப்புக்கொண்டனர். நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், 4.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, நான்கு இருசக்கர வாகனங்களையும் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X