இரு கோவில்களுக்கு ரூ.46 லட்சம் மதிப்பில் தங்க கவச கொடி மரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரு கோவில்களுக்கு ரூ.46 லட்சம் மதிப்பில் தங்க கவச கொடி மரம்

Added : ஜூன் 20, 2020
Share

ஈரோடு: ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில்களில், இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை கமிஷனர் செந்தில் வேலவன், சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது இரு கோவில்களிலும் பழுதடைந்த கொடிமரங்களை மாற்றிக் கொள்ள அனுமதித்தார். இதையடுத்து கபாலீஸ்வரர் கோவிலில், 33 அடி உயரம் கொண்ட, தங்க கவச கொடிமரம், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், 28 அடி உயரம் கொண்ட கொடிமரம், 21 லட்சம் ரூபாய் மதிப்பிலும் அமைக்கப்படுகிறது. இதற்கான தேக்கு மரங்கள், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. கொடி மரத்துக்கான பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று, கோவில் அலுவலர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X