தமிழ்நாடு

மாநகரில் கொரோனா 2வது இன்னிங்க்ஸ்? 'ஆட்டம்' நீடிப்பது பொதுமக்கள் கையில்!

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், கொரோனா தொற்று இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளது. 'ஆட்டத்தை' முடிவுக்கு கொண்டு வருவது, மக்கள் கையில்தான் உள்ளது. அதேசமயம் மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பும், போலீசாரின் கடும் நடவடிக்கையும், மேம்போக்கானதாக இல்லாமல், அக்கறையுடன் அமைய வேண்டியது, மிகமிக அவசியமாகிறது.
ஈரோடு, வளையக்கார வீதியில் டாக்ஸி டிரைவர் மனைவி, மெஸ் நடத்தும் பெண், அகத்தியர் வீதியை சேர்ந்த தொழிலாளி ஆகியோருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. இதனால் வளையக்கார வீதியை முற்றிலும் தனிமைப்படுத்தி, 60 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி, பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளவது.


இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஈரோடு வந்த, 29 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. இதனால் கண்ணகி வீதி, செங்குந்தர் திருமண மண்டபம் பகுதியில், சிலருக்கு பி.சி.ஆர்., பரிசோதனையும் செய்து, இப்பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவி, சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட இப்பகுதிகளில், கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு செய்து கூறியதாவது: அகத்தியர் வீதியில், 51 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. இங்குள்ளவர்களுக்கு தேவையான மொபைல் ஏ.டி.எம்., வசதி, ரேஷன் பொருட்கள், குடிநீர், பால் போன்ற அத்யாவசிய பொருட்கள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும், முழு ஒத்துழைப்பு வழங்கி, நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X