பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் மாஸ்க் அணியாமல் டூவீலர்களில் வந்தால் 'சிக்கல்'

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஈரோடு: மாநகரில், முகக்கவசம் அணியாமல் டூவீலர்களில் வந்தால், அபராதம் விதிப்பதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள, முகக்கவசம் அணிவது மிகமிக அவசியம். மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், தொடர்ந்து வலியுறுத்தினாலும், பலர் முகக்கவசம் அணியாமல் சுற்றுகின்றனர். இதுவரை, 8,000 பேருக்கு மேல் தலா, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக டூவீலரில் முகக்கவசம் இல்லாமல் வருவோருக்கு அபராதம் விதித்து, வாகனத்தை பறிமுதல் செய்து, மாலையில் திரும்ப வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் டூவீலர்களில் வந்தால், அவர்களின் பெற்றோரிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கமிஷனர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X