பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி., பூங்காவில் 400 கடைகள் கட்டியும் வீண்: வியாபாரிகள் அடம்; மாநகராட்சி மெத்தனம்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஈரோடு: வியாபாரிகள் அடத்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனத்தாலும், வ.உ.சி., பூங்காவில், 400 கடைகள் கட்டப்பட்டும், வீணாக கிடக்கிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு நேதாஜி மார்க்கெட், பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்டது. கடந்த, 1ம் தேதி முதல், பஸ்கள் இயங்கத் தொடங்கியுள்ளதால், மினி பஸ்கள் நிற்கும் இடத்துக்கு, கடைகள் மாற்றப்பட்டன. முன்னதாக வ.உ.சி., பூங்கா வளாகத்தில், அவசர கதியில், ?? லட்சம் ரூபாய் மதிப்பில், 400 கடைகள் ஷெல்டர் வசதியுடன், மாநகராட்சி நிர்வாகம் கட்டியது. அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்த பிறகும், கடைகள் இங்கு இடம் மாற்றப்படவில்லை. காரணம், நேதாஜி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள, 700 வியாபாரிகளும் தங்கள் அனைவருக்கும் கடை ஒதுக்கினால்தான் செல்வோம் என்று, அடம் பிடித்தனர். இதனால் கடைகள் திறப்பு விழா கண்டும், வீணாக கிடக்கிறது. வியாபாரிகளின் அடத்தால், மாநகராட்சி அதிகாரிகளும், கடைகளை அங்கு இடம் மாற்ற விரும்பாமல், மெத்தன போக்கை கடைப்பிடிக்கின்றனர். வளையக்கார வீதியை சேர்ந்த வியாபாரிகள்தான் அதிக அளவில், காய்கறி கடை நடத்துகின்றனர். தற்போது கொரோனா தொற்று பாதிப்பால், வளையக்கார வீதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டால், அவர்களால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக, மக்கள் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்டில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டை தற்காலிகமாக அடைக்க வேண்டும். நடமாடும் காய்கறி கடைகளை ஊக்கப்படுத்த வேண்டும். கொரோனா தொற்று இல்லை என்று முடிவு செய்தவுடன், மாநகராட்சி நிர்வாகம் மெத்தனத்தை கைவிட்டு, வ.உ.சி., பூங்காவில் கட்டி முடித்துள்ள கடைகளை, வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X