தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரம்

Added : ஜூன் 20, 2020
Share

கோபி: குண்டேரிப்பள்ளம் அணை உபரிநீரை சேமிக்க கட்டப்படும், தடுப்பணை பணியை, அமைச்சர் பார்வையிட்டார். கோபி அருகே கொங்கர்பாளையம் கிராமத்தில், குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. மொத்தம், 42 அடி நீர்மட்டம் கொண்ட அணையால், 2,498 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மழை காலங்களில் உபரிநீரை சேமிக்க வசதியாக, வாணிப்புத்தூர் ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட, பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதன்படி, இரு தடுப்பணைகள் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அண்ணமார் கோவில் அருகே, மோதூர் பிரிவு அருகே, இரு தடுப்பணை கட்டும் பணி, 5.86 கோடி ரூபாயில் தொடங்கியது. இரு தடுப்பணைகளும், 85 மீட்டர் நீளம், இரண்டு மீட்டர் உயரத்துக்கு அமைகிறது. இந்த பணியை, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். தடுப்பணைகள் கட்டும் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X