பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் கொரோனா தொற்று 79 ஆக உயர்ந்தது

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்த, 72 பேர் குணமடைந்தனர். அதன்பின், ஈரோட்டில் மூன்று பெண், ஒரு ஆண், அத்தாணியில் ஒரு ஆண் என தொற்று உறுதியாகி, 77 பேராக உயர்ந்தது. அத்தாணியை சேர்ந்தவர் பெயர், பிற மாவட்ட எண்ணிக்கைக்கு மாற்றப்பட்டது. சென்னையில் பணி செய்த, 28 வயது பெண், நான்கு நாட்களுக்கு முன், சொந்த ஊரான சித்தோட்டுக்கு வந்தார். இதேபோல் சென்னையில் இருந்து, மேட்டுநாசுவம்பாளையத்துக்கு வந்த, 30 வயது பெண்ணுக்கும் கொரோனா உறுதியானது. ஈரோடு, மூலப்பாளையத்தை சேர்ந்த, ஒரு ஆடிட்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர் பணிபுரியும் இடத்தில் மேலும், ஆறு பேர் பணி செய்வதால் அவர்களுக்கு பரிசோதனை நடந்து வருகிறது. ஆர்.கே.வி., சாலையில், பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடையில், இரு தினங்களுக்கு முன், ஆடிட்டர் பணி செய்ததால், அக்கடையும் பூட்டப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, 79, ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X