பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

வேலூர்: சென்னையிலிருந்து வருபவர்களால், கொரோனா அதிகரித்து வருகிறது. வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி., அலுவலகத்தில் பணிபுரியும், 25 வயது ஆண், வேலூர் மத்திய சிறையில் பணியாற்றும் தொரப்பாடியை சேர்ந்த, 30, 40 ஆகிய ஆண் காவலர்களுக்கும் கொரோனா உறுதியானது. இதனால் சிறைத்துறை டி.ஐ.ஜி., அலுவலகம் மூடப்பட்டது. மேலும் வேலூர் மாவட்டத்தில் பொய்கை, சைதாப்பேட்டை, கொசப்பேட்டை, தோட்டப்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள், 64 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர், அரியூர், குடியாத்தம், பழைய காட்பாடி, விருபாட்சிபுரம், தர்ணம்பேட்டை, அண்ணாநகர், சலவன்பேட்டை, சத்துவாச்சாரி, தொரப்பாடி, அணைக்கட்டு பகுதிகளிலும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில், 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 383 ஆக உயர்ந்துள்ளது. அனைவரும், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டையில் 5 பேர்: காஞ்சிபுரம் சென்று வாணாபாடிக்கு திரும்பிய, 28 வயது ஆண், சோளிங்கரில், 33 வயது ஆண், சென்னை சென்று வாலாஜாபேட்டை திரும்பிய, 23 வயது பெண், திருவள்ளூர் சென்று தக்கோலம் திரும்பிய, 62 வயது முதியவர், அரப்பாக்கத்தை சேர்ந்த 31 வயது ஆணுக்கு கொரோனா உறுதியானது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 415 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் 5 பேர்: திருப்பத்தூரை சேர்ந்த கோவில் அர்ச்சகரின், 32 வயது மனைவிக்கு காஞ்சிபுரம் சென்று திரும்பிய நிலையில் கொரோனா உறுதியானது. வாணியம்பாடியில் பேக்கரி தொழிலாளியின், 22 வயது கர்ப்பிணி மனைவி, சென்னாம்பேட்டையில், 25, 30 வயது ஆண்கள், ஆம்பூரை சேர்ந்த, 37 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 69 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X