பொது செய்தி

தமிழ்நாடு

மலை கிராமங்களில் சாலை பணி: புல்லட் வாகனத்தில் கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே மலை கிராமங்களில், 13.4 கி.மீ., தூரம் சாலை அமைக்கும் பணியை, கலெக்டர் புல்லட் வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மலைக்கிராமமான கீழ்வலசை, மேல்வலசை, அக்கரப்பட்டு ஆகிய கிராமங்களில் மழைவாழ் மக்கள், 800 பேர் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, அரசு பழங்குடியினர் நல ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. மூன்று கிராமங்களை சேர்ந்த, மலை வாழ் மக்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின், தண்டராம்பட்டு வட்டார மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம், வாணாபுரம், சேரப்பட்டு வழியாக, 90 கி.மீ தூரம் சுற்று பாதையில், கரடு முரடான மலைப்பாதையில் பயணம் மேற்கொண்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலை அமைக்க வேண்டும் என்ற, இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 7.22 கோடி ரூபாய் மதிப்பில், 13.4 கி.மீ தூரம், தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. வாகனங்களில் அப்பகுதியில் செல்ல முடியாததால், கலெக்டர் கந்தசாமி புல்லட்டில் சென்று பணியை ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X