பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் கட்டணம் வசூல் புகார்: மின் வாரியம் விளக்க பேனர் வைப்பு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

அரூர்: கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, மின் வாரியம் சார்பில், விளக்க பேனர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்ட நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த, ஜூன், 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூடுதலாக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தர்மபுரி மாவட்டம், அரூரில் கட்டணம் வசூலிக்கப்படும் மின் வாரிய அலுவலகங்களில், விளக்க பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், 'அன்பார்ந்த மின் நுகர்வோருக்கு, மார்ச், ஏப்ரல் மாத மின் கட்டணத்தை செலுத்தி இருப்பீர்கள். தற்போது, உங்களது மே, ஜூன் மாத மின்சார பயன்பாடு அளவு துல்லியமாக கணக்கிடப்பட்டு, அதற்குரிய பணம் சரியான முறையில் வசூல் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு நான்கு மாதங்களில், 400, 500 மற்றும், 1,560 யூனிட் உபயோகித்திருந்தால், செலுத்த வேண்டிய மின்கட்டணம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இறுதியில், மின்சார வாரிய நிர்வாகம் கூடுதலாக, கட்டணம் வசூலிக்கவில்லை. நோய் தொற்று காலத்திலும், மக்கள் நலன் கருதி பணிபுரியும் மின்வாரிய பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X