பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுடன் வந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

தர்மபுரி: கொரோனா தொற்றுடன், ஓசூர், பெங்களூருவில் இருந்து தர்மபுரி வந்த, இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பகுதிகளில், கொரோனா தொற்று பரவி வருவதால், அங்கிருந்த தர்மபுரி மாவட்ட மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். நேற்று முன்தினம், கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூரில் இருந்து, தர்மபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய், பென்னாகரத்துக்கு வந்த இருவர் குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. பரிசோதனை முடிவில், அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X