பொது செய்தி

தமிழ்நாடு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி பெண் டாக்டர் கைது

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, போலி பெண் டாக்டரை, போலீசார் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரத்தில், போலி பெண் டாக்டர் ஒருவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது. இதன்படி, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பகவடிவு, வட்டார மருத்துவ அலுவலர் அருண் தலைமையிலான குழுவினர், வெங்கடசமுத்திரம் நான்குரோட்டில் உள்ள சக்தி கிளினிக்கில் நேற்று மதியம், 3:30 மணிக்கு சோதனை செய்தனர். இதில், தேவி, 45, என்பவர் டாக்டரான அவரது சகோதரர் பெயர் போர்டை வைத்து கடந்த, 15 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது தெரிந்தது. இதையடுத்து, ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கிளினிக்கை சீல் வைத்தனர். போலி பெண் டாக்டர் தேவியை, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X