பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

மொரப்பூர்: மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து, துணைத்தலைவர் உள்ளிட்ட, ஐந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியக்குழு தலைவராக, தி.மு.க.,வை சேர்ந்த சுமதி செங்கண்ணனும், துணைத்தலைவராக பா.ம.க.,வை சேர்ந்த பெருமாளும் உள்ளனர். இந்நிலையில், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய கவுன்சிலர்களின் இரண்டாவது நிர்வாக குழு கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் முன்னிலையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ஒன்றியக்குழு நிர்வாகத்தின் மீது, பல்வேறு புகார்களை தெரிவித்து, துணைத் தலைவர் பெருமாள் மற்றும் நான்கு கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர். இது குறித்து பெருமாள் கூறியதாவது: ஒன்றியக்குழுத் தலைவராக உள்ள சுமதியின் கணவர் செங்கண்ணன், மொரப்பூர் ஒன்றிய, தி.மு.க., செயலாளராக உள்ளார். இவர், ஒன்றியக்குழு தலைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, அலுவலக பணிகளை செய்கிறார். மேலும், தமது சொந்த வேலைகளையும், தி.மு.க., கட்சி பணிகளையும் அலுவலகத்தில் மேற்கொள்கிறார். ஒன்றிய பொது நிதியில் வரவு, செலவுகளில் பல்வேறு நிர்வாக முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெறாமல், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதை கண்டித்து நான், எங்கள் கட்சியை சேர்ந்த இருவர் மற்றும், தி.மு.க.,-அ.தி.மு.க.,வை சேர்ந்த தலா ஒருவர் என, ஐந்து பேர் வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X