ராகுல் பிறந்த நாள் விழா: மரக்கன்றுகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராகுல் பிறந்த நாள் விழா: மரக்கன்றுகள் வழங்கல்

Added : ஜூன் 20, 2020
Share

ஓசூர்: ஓசூரில், ராகுல் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்ட ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், காங்., முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி., பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளருமான மனோகரன் தலைமையில், கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார், 50 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து, உப்பாரப்பள்ளி பகுதியில், 100 விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை எம்.பி., வழங்கினார். மேலும், பத்து பஞ்சாயத்துகளில் தூய்மை பணிகள், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட துணைத்தலைவர் முனிராஜ், முன்னாள் தலைவர் காசிலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X