பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் கொரோனா தடுப்பு: காணொலி காட்சி மூலம் கூட்டம்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட, கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் தலைமையில், காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர், எஸ்.பி., பண்டிகங்காதர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசெல்வன், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் பேசியதாவது: சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்களை, ஏழு நாட்கள் முகாம்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். தொற்றுள்ள நபர்களை கண்டறியும் பட்சத்தில், அவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல் மற்றும் அவர்களை சார்ந்தவர்களை கண்டறிந்து, வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு, அவர்கள் வெளியில் வராத வகையில் கண்காணிக்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து, அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகிவற்றில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதலை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X