பொது செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., அலுவலகத்தில், சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த, இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் தலைமையில், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், ராணுவ வீரர்கள் படத்திற்கு மலர் தூவி, ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தனர். தொடர்ந்து, சீன பொருட்களை வாங்க மாட்டோம் என, நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். சூளகிரி பகுதியில், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், அகில பாரத ஹிந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பில், கவுரவ தலைவர் முருகன், மாநில செயலாளர் நாகராஜ், மாவட்ட தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள், ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஹிந்து முன்னணி நகர தலைவர் சரவணன் தலைமையில், பொறுப்பாளர்கள் கேசவன், மணிகண்டன், வருண் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X