பொது செய்தி

தமிழ்நாடு

வங்கியில் சமூக இடைவெளி இல்லாததால் காத்திருக்கு ஆபத்து

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: இந்தியன் வங்கியில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நிற்பதால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில், 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக கிருஷ்ணகிரி நகரின், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் சற்று குறைந்துள்ளது. வெளியில் இருந்து வருபவர்கள், தாங்களாகவே தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. வீட்டை விட்டு வெளியில் வரும் மக்கள், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, ஊத்தங்கரை இந்தியன் வங்கிக்கு வரும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும், ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதி நெருக்கமாக நிற்கின்றனர். இதனால், கொரோனா பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை, போலீசாரை கொண்டு ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X