சீன அதிபர் புகைப்படம் எரிப்பு: 29 பேர் மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீன அதிபர் புகைப்படம் எரிப்பு: 29 பேர் மீது வழக்கு

Added : ஜூன் 20, 2020
Share

ஓசூர்: ஓசூரில் சட்டவிரோதமாக கூடி, சீன அதிபர் புகைப்படத்தை எரித்ததாக, ஹிந்து அமைப்பினர், 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில், ஓசூர் காந்தி சிலை அருகே, நேற்று முன்தினம் மாலை, சீன அதிபர் ஜின்பிங்கின் புகைப்படம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது தொடர்பாக, ஓசூர் வி.ஏ.ஓ., நடராஜ், ஓசூர் டவுன் போலீசில், 'சட்ட விரோதமாக கூடி, சீன அதிபர் புகைப்படத்தை எரித்ததாக' புகார் செய்தார். இதையடுத்து, அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை செயலாளர் விஷ்ணுகுமார், மாவட்ட செயலாளர் சாந்தகுமார், பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் கிரண்குமார் உட்பட மொத்தம், 29 பேர் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X