தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவர், ஆசிரியர் உள்பட 7 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று மருத்துவர், ஆசிரியர் உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மருத்துவர் ஒருவர், திருவண்ணாமலையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். அவருக்கு நடத்திய சோதனையில், நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சூளகிரியை சேர்ந்த, 52 வயது ஆசிரியர் ஒருவர், காஞ்சிபுரம் சென்று வந்ததால், அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதே போல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, சூளகிரி அருகே உள்ள மேலுமலைக்கு வந்த, 33, வயது கார் ஓட்டுனர் ஒருவருக்கும், பெங்களூருவில் இருந்து கேரளா மாநிலத்திற்கு மருந்து பொட்ருட்களை ஏற்றிச் சென்ற, போச்சம்பள்ளி அருகே உள்ள காட்டாகரம் கிராமத்தை சேர்ந்த, 52, வயது ஓட்டுனர் ஒருவருக்கும், சென்னைக்கு சென்று வந்த கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையை சேர்ந்த, 46, வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், ஓசூரை சேர்ந்த, 39, வயது பெண்ணின் கணவர், கர்நாடகா மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதால், அப்பெண்ணிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரியைச் சேர்ந்த, 21, வயது இளைஞர் ஒருவர், கிருஷ்ணகிரி வந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதால், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X