பெயின்டர் கொலை: தலைமறைவாக இருந்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெயின்டர் கொலை: தலைமறைவாக இருந்தவர் கைது

Added : ஜூன் 20, 2020
Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை மேல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 27. பெயின்டர். இவருக்கும், நேதாஜி சாலை ரவுடி மார்கோ, 53, அவரது மகன் மணிமாறன், 19, ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த, 13ல் இரவு ஏற்பட்ட தகராறில், மணிகண்டனை மார்கோவும், அவரது மகன் மணிமாறனும் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். கொலை தொடர்பாக, மார்கோவை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மணிமாறனை தேடி வந்தனர். மணிமாறன் கர்நாடகாவில் இருப்பதாக தகவல் அறிந்து, கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார், அங்கு சென்று மணிமாறனை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X