சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவனத்தில் விபத்து: தொழிலாளர்களுக்கு சிகிச்சை

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், ரசாயனம் மூலம் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் இருவர் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகர், நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்துரு, 21. இவரும், மதுரை மாவட்டம், கொடுக்கம்பட்டியை சேர்ந்த அழகேந்திரன், 21, என்பவரும் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் அட்டை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். வழக்கம்போல், நிறுவனத்தில் இருந்த இயத்திரங்களை, ரசாயனம் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெளிப்பட்ட ரசாயன வீரியத்தால் விபத்து ஏற்பட்டு, சந்துரு, அழகேந்திரன் ஆகியோர், 80 சதவீதம் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்ட தொழிலாளர்கள், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வரும், சிவகாசி அடுத்த கோட்டமடக்கிபட்டி பசும்பொன் நகரை சேர்ந்த மாரி, 32, என்பவர் நேற்று முன்தினம், அளித்த புகார்படி, சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X