கஞ்சா கும்பல் தொடர்பு: பெண் எஸ்.ஐ., டிஸ்மிஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கஞ்சா கும்பல் தொடர்பு: பெண் எஸ்.ஐ., 'டிஸ்மிஸ்'

Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (1)
Share

திருச்சி: கஞ்சா கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து செயல்பட்ட பெண், எஸ்.ஐ., 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். திருச்சி போதை பொருள் தடுப்புப்பிரிவு, எஸ்.ஐ.,யாக இருந்தவர் புவனேஸ்வரி, 37. திருமணமாகி, கணவரை பிரிந்து வாழும் இவருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளன. இவருக்கு, கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, புகார்கள் வந்தன. கடந்த ஆண்டு ஜூலை மாதம், திருச்சி மாநகர போலீசார், எஸ்.ஐ., புவனேஸ்வரி வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, பிரவீன் ரெட்டி என்ற, ஆந்திராவைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி இருந்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, பிரவீன் ரெட்டியை திருமணம் செய்ய உள்ளதாக, புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில், புவனேஸ்வரி, ஆந்திரா கஞ்சா கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்து, கோடிக்கணக்கில் சம்பாதித்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை, 'டிஸ்மிஸ்' செய்து, திருச்சி போலீஸ் கமிஷனர் வரதராஜ் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X