பொது செய்தி

தமிழ்நாடு

டீ மாஸ்டர் பணியை விடாத இளம் பஞ்சாயத்து தலைவர்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

திருச்சி: பஞ்சாயத்து தலைவர் ஆன பிறகும், தொடர்ந்து டீ மாஸ்டராக பணியாற்றி வரும் இளைஞரை, கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். திருச்சி, அந்தநல்லூர் யூனியன், திருப்பராய்த் துறை பஞ்சாயத்து தலைவராக இருப்பவர், பிரகாஷ் மூர்த்தி, 35. திருப்பராய்த் துறையில், டீக்கடை நடத்தி வரும் இவர், தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், 600 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார். பஞ்சாயத்து தலைவர் ஆகியும், இன்னும் தன் டீக்கடையில் டீ, வடை போடும் மாஸ்டராக, பணியில் ஈடுபட்டு வருகிறார். டீ குடிக்க வரும் மக்கள், தங்களது பகுதி பிரச்னைக்குரிய புகார்களை, அங்கேயே கொடுத்துச் செல்கின்றனர். வழக்கமாக, தினமும் பஞ்சாயத்து அலுவலகம் சென்றாலும், இவரின் டீக்கடை தான், பஞ்சாயத்து அலுவலகம் போல, எப்போதும் பிசியாக இருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X