பொது செய்தி

தமிழ்நாடு

நஞ்சில்லா விவசாயத்துக்கு அங்ககச்சான்று: மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது, உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை தவிர்த்து, இயற்கை எரு, பஞ்சகாவ்யா, வேம்பு, தாவரங்கள் சார்ந்த பொருட்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை கொண்டு, விவசாயிகள், தன் பண்ணை சார்ந்த இடுபொருட்களை பயன்படுத்தி, செய்யப்படும் ஒரு தற்சார்பு விவசாய முறை. இயற்கை வழி விவசாயத்தில், விதை முதல் உற்பத்தி, அறுவடை, விளைபொருட்கள் விற்பனை வரை, அனைத்து நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய சில தர நிர்ணயங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், இயற்கை விளைபொருட்கள் உற்பத்தி செய்தல், பதனிடுதல் மற்றும் விற்பனைக்கு, மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண் திட்டத்தின்படி, வேளாண்மை, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில், அங்ககச்சான்று எனப்படும், இயற்கை வேளாண் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இச்சான்று பெற, தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்யலாம். மேலும் கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, வனப்பொருட்களை சேகரிப்பு செய்பவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரனை, 94433 93026; மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று ஆய்வாளர் ஹேமலதாவை, 88258 95746 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், நாமக்கல், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலும் அணுகலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X