பொது செய்தி

தமிழ்நாடு

நாளை சூரிய கிரகணம்: தர்ப்பை புல் விற்பனை அமோகம்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாளை நடக்கவுள்ள சூரிய கிரகணத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் தர்ப்பை புல் விற்பனை ஜோராக நடக்கிறது.
நடப்பாண்டின் முதல் சூரியகிரகணம் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி, காலை, 9:15 மணிக்கு தொடங்கி மதியம், 2:30 மணிக்கு முடிவடைகிறது. நண்பகல், 12:18 மணிக்கு உச்சம் அடைகிறது. கிரகண காலத்தில், வழக்கமாக நம் நாட்டில் கோவில்கள் அனைத்தும் நடை அடைக்கப்பட்டு, கிரகணம் முடிந்தபின் சிறப்பு பூஜை செய்து மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். தற்போது, கொரோனா ஊரடங்கு தொடர்வதால், 75 நாட்களுக்கும் மேலாக அனைத்து வழிப்பாட்டுத்தலங்களும் மூடிய நிலையிலேயே உள்ளன. கிரகண நேரத்தில், உணவு தானியங்கள், குடிநீர் பாத்திரங்கள், பூஜை அறைகள் ஆகியவற்றில், தர்ப்பை புல் வைத்து வழிபடுவது வழக்கம். அதனால், நாமக்கல் கடைவீதியில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நேற்று, தர்ப்பை புல்லின் விற்பனை ஜோராக நடந்தது.


இதுகுறித்து, விற்பனையாளர்கள் கூறியதாவது: திருமணம், கும்பாபி ?ஷகம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில், தர்ப்பை புல் விற்பனை நடக்கும். தற்போது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படும் நாட்களில் அனைத்து தரப்பினரும், தர்ப்பை புல்லை வாங்கிச் செல்கின்றனர். காவிரி ஆற்று ஓரங்களில் வளரும் தர்ப்பை புல்லை வாங்கி வந்து, ஒரு கட்டு, 10 முதல், 20 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X