பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி: துணை இயக்குனர் ஆய்வு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பாப்பம்பாளையத்தில், விவசாயி ஒருவர் பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றுள்ளார். பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளியில், 2018-19 ஆண்டில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு, தோட்டக்கலை துறை மூலம், நிழல் வலை குடில் அமைத்து குழுவிற்கு, நாற்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு, தக்காளி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் வழங்கப்பட்டன. பாப்பம்பாளையத்தில் தோட்டக்கலை துறை மூலமாக, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயிக்கு, ஒரு ஏக்கரில், 80 ஆயிரம் ரூபாய் மானியத்தில் பந்தல் சாகுபடி முறை அமைத்து தரப்பட்டது. இதில், தரமான காய்கறி சாகுபடி செய்து உயர் மகசூல் அடைந்து பயன்பெற்றுள்ளார். காய்கறிகளை ஈரோடு தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார். பந்தல் காய்கறி சாகுபடியை, தோட்டக்கலை துணை இயக்குனர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். பள்ளிபாளையம் தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொ) எழிலரசி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X