பொது செய்தி

தமிழ்நாடு

சாயக்கழிவுநீர் வெளியேற்றம்: இரவு நேரத்தில் ஆய்வு தேவை

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் உள்ள சாயப்பட்டறைகளில், இரவில் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஒரு சில தவிர, ஏராளமான சாயப்பட்டறைகள் விதிமுறை மீறி செயல்படுகின்றன. இதிலிருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேறும் சாயக்கழிவுநீர், நேரடியாக ஆற்றில் கலப்பதால், நீர் மாசடைந்து, இதை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு உடல் சார்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. விதிமுறை மீறி செயல்படும் சாயப்பட்டறைகளை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அகற்றி வந்தாலும், சிறிது நாட்களில் மீண்டும் செயல்பட தொடங்கி விடும். பகல் நேரத்தில் சாயக்கழிவுநீர் வெளியேற்றினால், பொதுமக்கள் பார்த்து புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால், சாயக்கழிவு நீரை தொட்டியில் தேக்கி வைத்து, இரவு, 11:00 மணிக்கு மேல், வடிகாலில் திறந்து விடுகின்றனர்.

இதுகுறித்து, ராமகிருஷ்ணா நகர் மக்கள் கூறியதாவது: இந்த பகுதியில் செல்லும் ஓடையில், இரவில் சாயக்கழிவுநீர் செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது என, பல மாதங்களுக்கு முன் புகார் செய்தோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மூன்று மாதங்கள் சம்பந்தப்பட்ட சாயப்பட்டறை செயல்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் செயல்படுகிறது. இரவு நேரத்தில் சாயக்கழிவு நீர் செல்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X