பொது செய்தி

தமிழ்நாடு

வெண்ணந்தூர் அரசு மருத்துவமனையில் இன்சுலின் இல்லாததால் அவதி

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் அரசு மருத்துவமனையில் இன்சுலின் மருந்து இல்லாததால் சர்க்கரை நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
ராசிபுரம் தாலுகாவில், ராசிபுரத்திற்கு அடுத்து வெண்ணந்தூரில்தான் அரசு மருத்துவமனை உள்ளது. மற்ற இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள்தான் உள்ளன. அரசு மருத்துவமனையில் தான் சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். பி.பி., சர்க்கரை, இதய நோய்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்படும். வெண்ணந்தூர் அரசு மருத்துவமனையில், இன்சுலின் உள்பட அனைத்து நோய்களுக்கும் மருந்து வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மருந்து வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, இங்கு இன்சுலின் மருந்து இல்லை. மாத்திரையில் இருந்து இன்சுலின் போட்டுக்கொள்ளும் நபர்கள் வெளியே வாங்கி போட தொடங்கியுள்ளனர். அந்த மருந்து வெளியே, 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வாரத்திற்கு இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, மருத்துவமனையில் விசாரித்த போது, 'இன்சுலின் மட்டுமின்றி பி.பி., உள்ளிட்ட பல நோய்களுக்கான மாத்திரை இல்லை. சில நாட்களில் அவை போதுமான அளவு வந்துவிடும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X