சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்சு லாரி எரிந்து சாம்பல்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

நாமகிரிப்பேட்டை: கள்ளக்குறிச்சியில் இருந்து, 15 டன் பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, மதுரை மாவட்டம் ராஜபாளையத்திற்கு, லாரி ஒன்று நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. லாரியை, கரூர் மாவட்டம், வெண்ணைமலையை சேர்ந்த இளங்கோவன், 30, ஓட்டி வந்தார். நள்ளிரவு, 1:00 மணியளவில், வாழப்பாடி வந்த இளங்கோவன், நாமகிரிப்பேட்டை அடுத்த, மங்களபுரம் வழியாக நாமக்கல் செல்ல முடிவு செய்தார். மங்களபுரம் வரும்போது, லாரியில் இருந்து தீ நாற்றம் வந்தது. இதையடுத்து லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது, பஞ்சு மூட்டைக்குள் இருந்து புகை வந்துள்ளது. ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அவர்கள் வருவதற்குள் லாரி முற்றிலும் எரிந்து சாம்பலானது. மங்களபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X