மயில்கள் விஷம் வைத்து கொலை: முதியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயில்கள் விஷம் வைத்து கொலை: முதியவர் கைது

Added : ஜூன் 20, 2020
Share

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, அரியாகவுண்டம்பட்டி அவுதியார் தோட்டம், பழனிவேல்,80, தோட்டத்தில் நேற்று முன்தினம் காலை, பெண் மயில்கள் இறந்து கிடந்தன. வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டனர். பின்னர், அரியாகவுண்டம்பட்டி வி.ஏ.ஓ., உமாமகேஸ்வரி முன்னிலையில் கால்நடை மருத்துவர் இறந்த மயில்களை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர், உடல் பாகங்கள், நாமக்கல் கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையில், பழனிவேல் வெங்காய தோட்டத்தை மயில் கூட்டம் சேதப்படுத்தியதால், மயில்களை கொல்ல, ஊறவைத்த மக்காச்சோளத்தில் விஷம் கலந்து வயலில் ஆங்காங்கே தூவியுள்ளார். இதை சாப்பிட்ட மயில்கள் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, பழனிவேலை வனத்துறையினர் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X