சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியின் காதலன் கொலை: கணவருக்கு இரட்டை ஆயுள்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கோட்டைமேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம், 42. அவருக்கு, அதே பகுதியை சேர்ந்த கன்னியப்பன், 43, மனைவி மரகதம் என்பவருடன், கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஆத்திரமடைந்த கன்னியப்பனும், மகன் கவுரி சங்கரும், 2017, டிச., 5ல், ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இருவரையும், குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நடத்திய நீதிபதி, நேற்று தீர்ப்பளித்தார். அதில், கன்னியப்பனுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதையடுத்து, அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த, பிப்., 1ல், குடும்ப பிரச்னை காரணமாக, கவுரி சங்கர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X