தமிழ்நாடு

தனியார் கல்லூரியில் 98 பேர் தனிமை: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில், வெளியூர்களில் இருந்து வந்த, 98 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும், 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 1 முதல் தமிழகத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகினறன. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இருந்தும், கரூர் மாவட்டத்துக்கு அதிகளவில், பொதுமக்கள் வந்துள்ளனர். அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வர்கள் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இருப்பினும், சிலர் வீட்டில் தனியாக இருப்பதை தவிர்த்து, வெளியிடங்களுக்கு தாராளமாக சென்று வருவதாக, ?ஹல்ப் லைன் தொலைபேசி எண்ணுக்கு அதிகளவில் புகார் சென்றது. இதனால், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையத்தில் உள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், நேற்று மதியம் வரை, வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து கரூர் வந்த, 98 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, படுக்கை உள்ளிட்ட, அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வருவாய் துறை, சுகாதார துறை ஊழியர்கள் கூறியதாவது: சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு, ஐந்து நாட்களுக்கு பிறகு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். இல்லையென்றால் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X