பொது செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில் மீட்பு குழு: போலீஸ் டி.ஐ.ஜி., தகவல்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கரூர்: 'காவிரியாற்றில் குளிப்பவர்கள் ஆற்றில் மூழ்கினால், அவர்களை மீட்க மீட்பு குழு தயாராக உள்ளது' என, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக கடந்த, 12ல் காவிரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிக பரப்பில் தண்ணீர் செல்கிறது. திருச்சி சரகத்தில் கடந்த, மூன்று ஆண்டுகளில், 61 பேர் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர். அதில், 42 ஆண்கள், எட்டு பெண்கள், 11 சிறுவர்கள் அடங்குவர். கரூர் மாவட்டத்தில், 28 பேர், திருச்சி மாவட்டத்தில், 33 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதை தவிர்க்கும் பொருட்டு, திருச்சி மாவட்டத்தில், 34 இடங்களும், கரூர் மாவட்டத்தில், ஒன்பது இடங்களும் ஆபத்தானவை என கண்டறியப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்கள் என கண்டறியப்பட்ட பகுதியில், பொதுப்பணி துறை, வருவாய் துறை உதவியுடன், விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கரையோர பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில், போலீசார், தன்னார்வலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு உட்கோட்ட, தலைமையிடத்தில் எஸ்.ஐ., தலைமையில், 10 பேர் கொண்ட பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசார் உரிய உபகரணங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X