பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இ-பாஸ் இன்றி ஊழியர்களை பணியமர்த்திய நகை கடைக்கு 'சீல்'

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

கோவை: இ-பாஸ் பெறாமல், சென்னையிலிருந்து கோவைக்கு ஊழியர்களை அழைத்துவந்து, தனிமைப்படுத்தாமல் நேரடியாக பணியமர்த்திய தனியார் நகை கடைக்கு வருவாய்த்துறையினர், 'சீல்' வைத்தனர்.latest tamil news
கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில், பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் சென்னை கிளையிலிருந்து, 30 ஊழியர்களை இ-பாஸ் இல்லாமல் அழைத்து வந்து பணியமர்த்தியுள்ளதாக, சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இன்று (ஜூன் 20) அந்த நகைக் கடையில் சோதனையிட்டனர். அப்போது, இ-பாஸ் இல்லாமல் ஊழியர்கள் வந்தது உறுதியானது.
இதையடுத்து, நகைக்கடையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கடைக்கு சீல் வைத்தனர். ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பின், ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் 180 பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


latest tamil newsகோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த செய்தியை, படங்களுடன் வெளியிட்டுள்ளார்.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'சென்னையிலிருந்து கோவைக்கு அழைத்துவரப்பட்டவர் களை தனிமைப்படுத்தாமல், நேரடியாகக் கடையில் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதனால், கடைக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் நாளை கிடைக்கும்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
21-ஜூன்-202016:16:48 IST Report Abuse
M.COM.N.K.K. தும்பை விட்டு வால் பிடித்தால் எப்படி முடியும். ஒரு போதும் முடியாது ஊரடங்கு தளர்த்தப்பட்டது என்றால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் கொரோனா பரவல் குறைந்துவிட்டது என்ற முடிவுக்கு வருவதுதான் காரணம்.தனி மனிதன் திருந்தினால் மட்டுமே கொரோனா பரவல் குறையும். மக்கள் எப்போது திருந்துவார்கள் என்பது தெரியவில்லை.
Rate this:
Cancel
Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூன்-202005:27:16 IST Report Abuse
Shiva It's ridiculous....thirty persons travelling without e pass raise the suspicion of police personnel in the check posts. முதல்ல செக்போஸ்ட்டில் வேலை செய்த நபர்களை சோதனை செய்து சஸ்பென்ஷன் ஆர்டர் குடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
20-ஜூன்-202020:32:04 IST Report Abuse
S.B.RAVICHANDRAN இந்தியாவில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் உள்ள வரை கோரோனா போதாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X