பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.7.18 கோடி செலவில் பரிசோதனை கருவிகள்: கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் அமைப்பு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கரூர்: ''கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், ஏழு கோடியே, 18 லட்சம் ரூபாய் செலவில், பரிசோதனை கருவிகள் நவீன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பயன்பாட்டை துவக்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 300 கோடி ரூபாய் மதிப்பில், கரூரில் அமைக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கடந்த மார்ச் மாதம், 5ல் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனையில், ஆறு கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி, 47 லட்ச ரூபாய் செலவில் எலும்பு முறிவு ஆப்பரேஷன் தியேட்டர், 21 லட்ச ரூபாய் செலவில் உணவு உபாதை கண்டறியும் கருவி ஆகியவை, ஏழு கோடியே, 18 லட்ச ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் புதிதாக ஒரு சி.டி., ஸ்கேன், மருத்துவமனையில் அமைக்கப்பட உள்ளது. கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, 241 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, கரூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், 217 பேர் பூரண குணம் பெற்று வீடு திரும்பி விட்டனர். தற்போது, 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக, டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். இவ்வாறு, அவர் கூறினார். கலெக்டர் அன்பழகன், எம்.எல்.ஏ., கீதா, மருத்துவ கல்லூரி டீன் தேரணி ராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X