பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும், தண்ணீரின் அளவு நேற்று அதிகரித்தது. ஆனால், அமராவதி அணைக்கு, தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக கடந்த, 12ல் மேட்டூர் அணையில் இருந்து, வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு கடந்த, 13 மாலை, 3:30 மணிக்கு, 5,050 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 9,235 கன அடி தண்ணீர் மாயனூர் கதவணைக்கு வந்தது. அந்த தண்ணீர் முழுவதும், மதகுகள் மூலம் காவிரியாற்றில், குறுவை பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது.* திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 34 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.94 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X