சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரியில் மணல் திருட்டு: சமூக விரோதிகள் பணம் வசூல்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதிகளில் மணல் அள்ள, உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இதனால், மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், இரவு, 11:00 மணி முதல் அதிகாலை, 5:00 மணிவரை மாட்டு வண்டிகள், டிராக்டர்களில், திருட்டுத்தனமாக மணல் அள்ளி செல்லப்படுகிறது. இந்நிலையில், நொய்யல், மரவாப்பாளையம், தவிட்டுப்பாளையம், நன்னியூர் புதூர், வாங்கல், நெரூர், திருமுக்கூடலூர், கட்டளை, மாயனூர், லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட காவிரியாற்று பகுதிகளில், மணல் அள்ளி செல்கிறவர்களிடம், மாட்டு வண்டிக்கு, 600 ரூபாய், டிராக்டருக்கு, 1,200 ரூபாய் என, உள்ளூரை சேர்ந்த சமூக விரோதிகள் வசூல் செய்கின்றனர். இதனால், அவர்களுக்கிடையே நாள்தோறும் தகராறு ஏற்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மணல் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X