டீ மாஸ்டர் கொலை: மூன்று பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டீ மாஸ்டர் கொலை: மூன்று பேர் கைது

Added : ஜூன் 20, 2020
Share
கரூர்: கரூரில் டீ மாஸ்டரை, கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கரூர், ஜவஹர் பஜார் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள வடிகாலில், கடந்த, 14ல் தலையில் காயங்களுடன், அடையாளம் தெரியாத, ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் தான்தோன்றிமலை காளியப்பனூர் பகுதியை சேர்ந்த, டீ மாஸ்டர் மூர்த்தி, 49, என்பதும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும்

கரூர்: கரூரில் டீ மாஸ்டரை, கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கரூர், ஜவஹர் பஜார் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள வடிகாலில், கடந்த, 14ல் தலையில் காயங்களுடன், அடையாளம் தெரியாத, ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் தான்தோன்றிமலை காளியப்பனூர் பகுதியை சேர்ந்த, டீ மாஸ்டர் மூர்த்தி, 49, என்பதும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக கரூர் டவுன் போலீசார், பசுபதிபாளையம் ராஜேஷ், 27, வெங்கமேடு கோபி, 26, ஜீவா, 40, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தியை, மூன்று பேரும் அடித்து கொலை செய்து விட்டு, தப்பி ஓடியது தெரிந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X