மண் கடத்தல் புகார்: தந்தை கைது: மகனுக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண் கடத்தல் புகார்: தந்தை கைது: மகனுக்கு வலை

Added : ஜூன் 20, 2020
Share
குளித்தலை: கோரைமடை குளத்தில் மண் கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தந்தையை போலீசார் கைது செய்தனர். மகன் தலைமைறைவானார். குளித்தலை அடுத்த, கோரைமடையில் அரசுக்கு சொந்தமான குளத்தில் மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் சிந்தாமணிப்பட்டி போலீசார் சென்றபோது, ஒரு யூனிட் டிப்பர் டிராக்டரில் மண் கடத்தியது தெரிந்தது. இதில், அதே பகுதியை

குளித்தலை: கோரைமடை குளத்தில் மண் கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தந்தையை போலீசார் கைது செய்தனர். மகன் தலைமைறைவானார். குளித்தலை அடுத்த, கோரைமடையில் அரசுக்கு சொந்தமான குளத்தில் மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் சிந்தாமணிப்பட்டி போலீசார் சென்றபோது, ஒரு யூனிட் டிப்பர் டிராக்டரில் மண் கடத்தியது தெரிந்தது. இதில், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி,42, அவருடைய மகன் சக்திவேல்,20, சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், முத்துசாமியை கைது செய்தனர். சக்திவேலை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X