ஓடை மண் கடத்தல்; வாகனம் பறிமுதல்: டிரைவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடை மண் கடத்தல்; வாகனம் பறிமுதல்: டிரைவர் கைது

Added : ஜூன் 20, 2020
Share

குளித்தலை: கணேசபுரத்தில், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., கணேசபுரத்திலுள்ள ஒரு தோட்டத்தில் இருந்து, ஓராளிபள்ளம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக், 25, என்பவர், நேற்று அதிகாலையில் டிராக்டரில், 2 யூனிட் ஓடை மண்ணை ஏற்றிக் கொண்டு வந்தார். அந்த வாகனத்தை மடக்கி, போலீசார் விசாரணை செய்ததில், மண் கடத்தியது தெரியவந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக்கை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X