பிக்பாக்கெட் திருடர்களால் பயணிகள் அச்சம்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் பிக்பாக்கெட் திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் அச்சத்தில் வந்து செல்கின்றனர்.
தமிழகத்தில் தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள் பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளன. மேலும், குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, பிக்பாக்கெட் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காலை மற்றும் இரவு நேரங்களில் பயணிகளை திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள பணத்தை திருடிச் செல்லும் அவலம் நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையத்தில், போலீசார் பெரும்பாலும் இருப்பது இல்லை. இதனால், திருடர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நாள் தோறும், 30 பயணிகள் வரை பணத்தை பறி கொடுக்கின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் எரியும்படி செய்ய வேண்டும். மேலும், புறக்காவல் நிலையத்தில், நாள்தோறும் போலீசாரை, பணியமர்த்த வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X