பொது செய்தி

தமிழ்நாடு

'10ம் வகுப்பு மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை'

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கோபி: 'பத்தாம் வகுப்புக்கு, மதிப்பெண் வழங்குவதில், குளறுபடி செய்யும், தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, குண்டேரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே, 5.86 கோடி ரூபாயில் கட்டப்படும் இரு தடுப்பணைகளை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீரை சேமிக்கும் வகையில், இரு தடுப்பணைகள் கட்டமைப்பால், 175 கிணறுகளும், 125 ஆழ்துளை கிணறுகளும் பயன்பெறும். இதன் மூலம் ஆயக்கட்டு நிலங்களாக, 750 ஏக்கர் பாசனம் பெறும். இத்திட்டத்தின் மூலம், நான்கு கி.மீ., சுற்றளவுக்கு நீராதாரம் பெருகும். இன்னும் பவானி ஆற்றங்கரையில், நான்கு தடுப்பணைகள் கட்ட, ஆய்வு பணிகள் முடிந்து, அதன் மதிப்பீடுகள், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால், ஆறு பயணிக்கும் வழிகளில், 50 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை மூலம் முழுமையாக கண்காணித்து வருகிறோம். தனியார் பள்ளியில் பயிலும், மாணவ, மாணவியரின், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் விபரங்கள், முன்கூட்டியே எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் பட்டியல் குறித்து ஆய்வு செய்ய தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவதில், தவறான முறையில், குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X