சம்பவம் செய்தி

தமிழ்நாடு

125 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்: கல்குவாரி தொழிலாளர்கள் இருவர் பலி

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, 125 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், கல்குவாரி தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, பாகலூர் அடுத்த வெங்கடேசபுரம் அருகே, தனியார் கல்குவாரி உள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த சீலநாயக்கனூரை சேர்ந்த அமர், 22, பணியாற்றி வந்தார். அப்பகுதியை சேர்ந்த பச்சையப்பன், 22, சிப்ஸ் கடையில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்ததால், கடந்த சில நாட்களாக அமீருடன் கல்குவாரியில் பணியாற்ற சென்றார். இந்நிலையில், நேற்று காலை குவாரியில் வெடி வைப்பதற்காக, மலையின் அடிப்பகுதி பாறையில் டிராக்டர் மூலம் டிரில் போடும் பணியில், அமர், பச்சையப்பன் ஈடுபட்டிருந்தனர். பணியை முடித்து விட்டு இருவரும் மதியம், 3:00 மணிக்கு, மேல் பகுதிக்கு டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அமர் டிராக்டரை ஓட்டினார். 125 அடி உயரத்தில் டிராக்டர் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, குவாரியில் கல் வெட்டி எடுக்கப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அமர், பச்சையப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியான பச்சையப்பனுக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X