பொது செய்தி

தமிழ்நாடு

5 டாஸ்மாக் கடைகளுக்கு குமாரபாளையத்தில் 'சீல்'

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத, ஐந்து டாஸ்மாக் கடைகளுக்கு, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., மணிராஜ், 'சீல்' வைத்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை டாஸ்மாக் கடைகளும் பின்பற்ற வேண்டும். சில டாஸ்மாக் கடைகள் இந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என, புகார் வந்தது. சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி வைத்திருத்தல், குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக விற்பனை செய்வது, அனுமதியில்லாமல் பார் நடத்துவது, ஒவ்வொரு நபருக்கும் குறிப்பிட்ட பாட்டில்கள் மட்டுமே வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளன. யார் எவ்வளவு கேட்டாலும், அவ்வளவு பாட்டில்கள் விற்பது, விற்பனை நேரத்தை அனுமதியின்றி அதிகரித்தது, பார் வைத்து சட்ட விரோதமாக நடத்தியது உள்ளிட்ட செயல்களுக்காக, ஐந்து டாஸ்மாக் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார். தாசில்தார் தங்கம், இன்ஸ்பெக்டர் தேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X