பொது செய்தி

தமிழ்நாடு

'தொற்று பரவாமல் இருக்க அரசுக்கு தகவல் கொடுங்க...'

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர், இ - பாஸ் இல்லாமல், பிற மாவட்டங்களில் நுழைவதால், கொரோனா தொற்று அபாயம் அதிகரித்துள்ளது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தோ யாரேனும், உங்கள் பக்கத்து வீட்டுக்கோ அல்லது உங்கள் தெருவுக்கோ வந்திருந்தால், உடனடியாக அரசுக்கு தகவல் கொடுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து, கொரோனாவுக்கு பயந்து, ஊர் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சோதனைக்கு உட்படாமல் தப்பிக்க, பல்வேறு குறுக்கு வழிகளை கையாள்கின்றனர். பிரதான சாலையில் வராமல், கிராமத்து சாலைகளில் நுழைபவர்களால் தொற்று பரவும் நிலை உருவாகியுள்ளது. இப்படி வருபவர்கள், தங்களது குடும்பத்தினர், உறவினர், அருகில் வசிப்பவர்கள் ஆகியோருக்கும், கொரோனாவை பரிசாக வழங்குவர். இவர்களை கண்டறிவும், சோதனைக்கு உட்படுத்துவதும் போலீசாரின் வேலை என மக்கள் நினைத்து, அலட்சியமாக இருந்துவிட்டால், கொரோனா சமூக தொற்றாக மாறி, பெரும் அபாயத்தை உருவாக்கிவிடும். எனவே, உங்கள் வீட்டு அருகில், எவர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தாலும், அந்தந்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்து, கொரோனா அபாயத்திலிருந்து தப்பித்துக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர். உங்கள் வீட்டுக்கு அருகில், வெளிமாவட்டங்களிலிருந்து யாரேனும் வந்திருந்தால், மாவட்ட ஹெல்ப் லைன் 1077, மாநில ஹெல்ப் லைன் 044 29510500, போலீஸ் கட்டுப்பாட்டு எண் 100 உள்ளிட்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, விபரங்களை தெரிவியுங்கள். உங்களையும், உங்கள் பகுதியையும் கொரோனாவிலிருந்து காப்பாற்றி கொள்ளுங்கள்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X