பொது செய்தி

தமிழ்நாடு

அரசு டவுன் பஸ்சில் படிக்கட்டில் தொங்கிய பயணியர்: மேலாளர் இடமாற்றம்; டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஓமலூர்: அரசு டவுன் பஸ்சில், படிக்கட்டில் தொங்கும் அளவு பயணியரை ஏற்றியதால், டிரைவர், கண்டக்டர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பணிமனை மேலாளர் இடமாற்றப்பட்டார்.
சேலம் மாவட்டம், தின்னப்பட்டியில், கடந்த, 17 இரவு, 80ம் எண் அரசு டவுன் பஸ், பயணியரை ஏற்றிக்கொண்டு, ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் வந்தது. அங்கிருந்த பயணியரை ஏற்றிக்கொண்டு, சேலம், புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்றது. அதில், 60க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். இதை, மொபைல் போனில் பதிவு செய்த சிலர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இதையறிந்த மாவட்ட நிர்வாகம், சேலம் மாவட்ட போக்குவரத்து நிர்வாக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தது. இது தொடர்பாக, நேற்று முன்தினம், விசாரணை நடந்தது. நேற்று, ஓமலூர் அரசு பஸ் பணிமனை மேலாளர் பார்த்திபன், நாமக்கல் மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டார். டிரைவர் எல்லப்பன், கண்டக்டர் வெங்கடேஷ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மேலும், அந்த நேரத்தில் பணிபுரிந்த, நேரக்காப்பாளர் ராஜூவுக்கு பணி ஒதுக்க வேண்டாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X