பொது செய்தி

தமிழ்நாடு

அசாம் ரைபிள் படை பிரிவுக்கு 115 டன் பால் அனுப்பிவைப்பு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்திலிருந்து, திமாபூர் அசாம் ரைபிள் படை பிரிவுக்கு, 115 டன் பால், சிறப்பு ரயில் மூலம் அனுப்பப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று, சேலத்திலிருந்து, நாகாலாந்து மாநிலம், திமாபூர் அசாம் ரைபிள் படை பிரிவுக்கு, 115 டன் ஆவின் பால் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்காக சேலம் ஆவினில், டெட்ரா பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட பால், லாரிகள் மூலம். சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டுவந்து, ஐந்து வேகன் அடங்கிய சிறப்பு ரயிலில் ஏற்றப்பட்டது. முன்னதாக, சுமைதூக்கும் பணியாளருக்கு காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினியால் கைகளை சுத்தப்படுத்தல், முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், 7.6 லட்சம் ரூபாய், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X