பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 4 அடி சரிவு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், ஒரு வாரத்தில், 4 அடி சரிந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கடந்த, 12ல், அணை நீர்மட்டம், 101.73 அடி, நீர் இருப்பு, 67.10 டி.எம்.சி., இருந்தது. அன்று முதல், தொடர்ச்சியாக டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு வாரமாக அணைக்கு வினாடிக்கு சராசரியாக, 2,000 கனஅடி நீர் வந்தது. நேற்று, அணை நீர்வரத்து வினாடிக்கு, 2,037 கனஅடியாக இருந்தது. வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால், அணை நீர்மட்டம் நேற்று, 97.98 அடி, நீர்இருப்பு, 62.25 டி.எம்.சி.,யாக சரிந்தது. இதனால், ஒரு வாரத்தில், நீர்மட்டம், 4 அடி, நீர் இருப்பு, 5 டி.எம்.சி., சரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X