வென்டிலேட்டர் பிளக்கை கழற்றியதால் கோட்டா மருத்துவமனையில் கொரோனா நோயாளி பலி

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் கோட்டா மருத்துவமனையில், ஏர் கூலரை பயன்படுத்த, தவறுதலாக வென்டிலேட்டர் பிளக்கை கழற்றியதால் கொரோனா பாதித்த 40 வயதான நோயாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலங்களும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராஜஸ்தானிலும் நோய் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானில் உள்ள கோட்டா மருத்துவமனையில் கடந்த வாரம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மகாராவ் பீம் சிங் என்பவர் அனுமதிக்கப்பட்டார். பாதுகாப்பு நடவடிக்கையே தொடர்ந்து, ஐசியுவில் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர், மருத்துவமனை வளாகத்தில் சற்று வெப்பமாக இருந்ததால் தனிமை வார்டில் ஏர் கூலரை வாங்கியிருந்தார். இதனால் அந்த ஏர் கூலரைப் பயன்படுத்த, குடும்ப உறுப்பினர்கள் தவறுதலாக வென்டிலேட்டர் பிளக்கை அவிழ்த்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, வென்டிலேட்டர் மின்சாரம் இல்லாமல் ஓடியது.


latest tamil news



வென்டிலேட்டரின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டு 40 வயதான அந்நோயாளி சுவாச பிரச்னையால் திணறினார். பின் சில நிமிடங்களிலேயே இறந்து விட்டார். மருத்துவமனையில் வென்டிலேட்டரில் சிக்கல் ஏற்பட்டதாக 40 நிமிடங்கள் கழித்து தான் மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர். இந்த சம்பவம் குறித்து துணை கண்காணிப்பாளர், நர்சிங் கண்காணிப்பாளர் மற்றும்கடமையில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நவீன் சக்சேனா தெரிவித்தார். நோயாளியின் மரணம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
21-ஜூன்-202000:20:20 IST Report Abuse
தல புராணம் //நோயாளியின் மரணம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.// எமன் கிட்டே மறுஆய்வு பண்ணச்சொல்லி மனு கொடுப்பாங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X